99 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ்.. குஜராத் அணி படுதோல்வி.!

125

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

திலக் வர்மாவின் அபார சதமும், அஸ்வினி குமாரின் சிறப்பான பந்துவீச்சும் மும்பைக்கு இந்த பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. இதன் மூலம் தொடரில் ஏற்பட்டிருந்த தோல்வி தொடர் முடிவுக்கு வந்து, மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியது.

மும்பை அணியின் இன்னிங்ஸ் தொடக்கத்தில் சிரமமாக இருந்தபோதிலும், திலக் வர்மா அதிரடி ஆட்டம் மூலம் நிலைமையை மாற்றினார்.

அவர் சிக்ஸர்கள், பவுண்டரிகள் மழையால் சதம் அடித்து அணியை 20 ஓவர்களில் 199/5 என்ற வலுவான ஸ்கோருக்கு கொண்டு சென்றார். பதிலுக்கு விளையாடிய குஜராத் அணியில் சுப்மன் கில் (41) மட்டுமே ஓரளவு நிலைத்திருந்தார்; மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

தொடக்கத்தில் சாய் சுதர்சன், ஜாஸ் பட்லர் ஆகியோர் சீக்கிரமே அவுட்டானது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

அஸ்வினி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அதிரடியான பந்துவீச்சால் குஜராத் அணி 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் மும்பை 99 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றி மும்பை அணிக்கு புதிய உற்சாகத்தை வழங்கியுள்ள நிலையில், அடுத்த போட்டிகளில் அணியின் செயல்பாடு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.