உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று

108

இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று நினைவேந்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை காலை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்கள், அதேபோல் பிரபல ஹோட்டல்கள் இலக்காக தாக்கப்பட்டன. இந்த கொடூரச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தததுடன், ஆயரக்கணக்கானோர் காயமடைந்ததனர்.

இன்று நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் விசேட திருப்பலிகள், மெழுகுவர்த்தி ஏற்றுதல், மௌன அஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. உயிரிழந்தோரின் குடும்பத்தினர் நீதி கோரி மீண்டும் குரல் கொடுத்து வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஏழு ஆண்டுகள் கடந்தும், உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்துக்கொண்டிருக்கின்றன.