வேவண்டன் மக்களுக்கு எப்போது விடிவு? ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள்

69

கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேவண்டன் தோட்டத்தின் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

பதாதைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பி வேவண்டன் தோட்டத்திலிருந்து கண்டி நுவரெலியா பிரதான பாதைக்கு சென்று கெரண்டி எல்ல பிரதேசத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

சுமார் 48 குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் இந்த பெருந்தோட்டத்தில் வசித்து வருகின்றனர்.

கடந்த டிட்வா காலத்தில் இந்த தோட்டத்துக்கு செல்லும் பிரதான பாதை முழுமையாக சேதம் அடைந்தது.

இதனால் இந்த தோட்டத்தில் உள்ள பாடசாலையும் தற்போது இயங்காமல் உள்ளது.

டிட்வா காலத்தில் அருகில் உள்ள பாடசாலைகளில் தங்கி வந்த நிலையில் மீண்டும் தனது சொந்த இடமான வேவண்டன் தோட்டத்துக்கே சென்று வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில், அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருவதாக தெரிவித்த கொத்மலை பிரதேச செயலகம் கடந்த 9 மாதங்கள் கடந்தும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தற்போது தோட்டத்துக்கான ஒரு கிலோ மீற்றர் கொண்ட பாதையை புணரமைத்து தரும்படி இந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.