செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி – இதுவரை 420 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு.!

58

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம், 34ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது புதிதாக 06 என்புக்கூடுகள் இன்று வெளிப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.

அதன்படி, இன்றுடன் 420 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் 416 என்புக்கூட்டுத் தொகுதிகள் துப்புரவாக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 130 பிறசான்றுப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.