ரூ.49.9 இலட்சம் மோசடி செய்த நபர் கைது.!!

93

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து 4,990,000 ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடி தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், [16.06.2026] மதியம் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என்றும், அவர் இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதி மோசடி சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களைத் திரட்டும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. மேலும், மோசடியில் வேறு நபர்கள் தொடர்புடையுள்ளனரா என்பதையும் கண்டறிய கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.