மன்னாரில் இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் படைவீரர் ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் காயம்.!!

42

மன்னார்–தலைமன்னார் வீதியின் கீரியன்குடியிருப்பு பகுதியில் 24 அக்டோபர் மாலை இடம்பெற்ற இராணுவ Defender வாகன விபத்தில் படைவீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

செல்வாரி இராணுவ முகாமுக்குச் சொந்தமான வாகனம் தலைமன்னார் நோக்கிப் பயணித்தபோது கழுதை ஒன்று வீதியைக் கடந்ததாகவும், இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பனைமரத்துடன் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் முதலில் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகச் குறிப்பிடப்படுகிறது.

உயிரிழந்தவர் 42 வயதுடைய இராணுவப் படைவீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்து தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.