புத்தர் சிலையை கடத்தியவர்கள் கைது!

81

பழமையான புத்தர் சிலை கடத்தல்: 14 பேர் கைது.

மாவத்தகம (Mawathagama) பகுதியில் இருந்து பழமையான மதிப்புமிக்க புத்தர் சிலை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கடத்தப்பட்ட புத்தர் சிலையும், அதனை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட இரண்டு வான்கள்  ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

கஹபத்வல பகுதியில் அமைந்துள்ள கெபிதிகொட புராண விகாரையின் தேரர்களில் ஒருவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை காணாமல் போனதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

கடந்த 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர், குறித்த விகாரைக்கு வந்து, தேரரிடம் இருந்து புத்தர் சிலையை எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

 

கடத்தப்பட்ட சிலை 1 ½ அடி உயரம் கொண்ட தங்க நிறமுடைய புத்தர் சிலை என்றும்க்ஷபழமையான வரலாற்றுக்க  எனவும் பெரும் விலை மதிப்புடையது எனவும் தெரியவருகிறது.

 

கைது செய்யப்பட்டவர்கள் மினிகமுவ, தெல்தெனிய, மொனராகல, மாதுகம, மாத்தளை மற்றும் ரிடீகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 22 தொடக்கம் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள்

சந்தேகநபர்கள் பிலேஸ்ஸ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.