வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்ட ரி20 உலககிண்ணம் : கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.!

199

இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ணத்திற்கான வெற்றி கிண்ணம் இன்று(01) வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்ட வெற்றிக்கிண்ணமானது பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது.

இதன்போது வடமாகாண துடுப்பாட்ட சங்கத் தலைவர் உட்பட வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணிகள் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வரவேற்றனர்.