“புதிய உலகை Gen Z தலைமுறையினரே வழிநடத்த வேண்டும்” – இளைஞர்களுக்கு ரணில் விக்ரமசிங்க அழைப்பு!

134

தங்கள் தலைமுறையினர் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து முடித்துவிட்டதாகவும், தற்போதைய புதிய தலைமுறையினரின் (Gen Z) சிந்தனைகளையும் தேவைகளையும் அவர்களே நன்கு அறிவார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற இளைய தலைமுறையினருடனான கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய உலகை வழிநடத்த இளைஞர்கள் பயமின்றி முன்வந்து தலைமைத்துவத்தை பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், அவ்வாறு முன்வரும் இளைஞர்களுக்கு முழுமையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தனது காலத்தில் இளம் தலைவர்களுக்கு எவ்வாறு வாய்ப்பளித்தாரோ, அதேபோல் தற்போதைய இளைஞர்களும் தங்களுக்குத் தேவையான எதிர்காலத்தை தாங்களே வடிவமைக்க வேண்டும் என அவர் இதன்போது அறைகூவல் விடுத்தார்.