தேசிய கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மகளிர் அணி.

38

தேசிய கபடி போட்டியில் முதலிடம் பிடித்த யாழ்ப்பாண மகளிர் அணியை கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

முன்னதாக, தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் நடத்தப்பட்ட தேசிய மட்ட போட்டியில் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் கலந்து கொண்ட மகளிர் கபடி அணி தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றது.

முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தி 26 மாவட்டங்கள் பங்கு பற்றிய குறித்த போட்டியில் யாழ்ப்பாண மகளிர் கபடி அணி முதல் இடத்தை பெற்றது.

இறுதிப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மகளிர் கபடி அணியுடன் போட்டியில் மோதியதன் அடிப்படையில் வடமாகாணத்தை சேர்ந்த இரு அணிகள் இறுதி போட்டியில் விளையாடியமை விசேட அம்சமாகும்.

குறித்த போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கணைகள் யாழ்ப்பாண மாவட்ட செயலக பிரதான நுழைவாயிலில் இருந்து மாலை அணிவித்து வரவேற்றதுடன் வெற்றி ஈட்டிய வீராங்கணைகளுக்கு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.