கூழாமுறிப்பு அ.த.க பாடசாலை மாணவி நிசாந்தி க.பொ.த சாதாரண தரத்தில் 9A பெற்று சாதனை

74

முல்லை மண்ணின் கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையின் மாணவி நிசாந்தி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

இது பல ஆண்டுகளின் முயற்சி. 2009 இறுதி யுத்தத்தில் பிறந்த குழந்தை அவள். அவள் தரம் 5 இலேயே இந்த முடிவை தீர்மானமாக எடுத்தாள்.

அதற்காக உழைத்தாள். ஆளுமை மிக்க ஒரு பிள்ளையின் வெற்றி இது.

எங்கோ ஒரு மூலையில் வசதி வாய்ப்புகளற்ற ஒரு பாடசாலையின் இத்தகைய சாதனைகளையும் நாம் உலகறியச் செய்ய வேண்டும்.

வாழ்த்துக்கள் நிசாந்தி