கனடாவில் சிறுமிகளுடன் இணையவழி தகாத தொடர்பு; இலங்கை வம்சாவளி இளைஞர் கைது.!!

104

கனடாவில் 13 வயதிற்குட்பட்ட சிறுமிகளுடன் இணையவழி தகாத தொடர்புகளை பேணியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்கள் ஊடாக சிறுமிகளை தொடர்புகொண்டு தகாத உரையாடல்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் படி, சந்தேகநபர் Snapchat மற்றும் Reddit உள்ளிட்ட சமூக ஊடக செயலிகளை பயன்படுத்தி சிறுமிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு கோரியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது, சந்தேகநபரின் வசமிருந்த பல இலத்திரனியல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை மேலதிக தடயவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.