கனடாவில் கொடூரம்: இலங்கை இளைஞன் வீடு புகுந்து தாக்கி கொலை!

305

கனடாவில் கொடூரம்: இலங்கை இளைஞன் வீடு புகுந்து தாக்கி கொலை!

கனடாவின் நகரில் இலங்கை இளைஞர் ஒருவர் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, சஞ்சுல பெரேரா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் நள்ளிரவு சுமார் 12:40 மணியளவில் மற்றும் சந்திப்புக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளது.

அப்போது மர்மநபர்கள் இருவர் வீடு புகுந்து அங்கு இருந்த நபரை கடுமையாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், காயமடைந்த நபரை மீட்டு அவசர சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால், காயங்கள் தீவிரமாக இருந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னதாகவே சந்தேகத்திற்குரிய இருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.