இளைஞர்களை வாட்டும் இளநரை – வைட்டமின் குறைபாட்டை போக்க இதோ சில டிப்ஸ்.

74

இன்றைய காலத்தில் இளைஞர்களிடையே தலைமுடி நரைக்கும் பிரச்சனை அதிகரித்து வருகிறது.பெரும்பாலான இளைஞர்கள் தற்போது நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.

முதுமையின் அடையாளமாக காணப்படும் நரைமுடி தற்போது இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது.இதற்கு முக்கியமாக சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவாக இருப்பதே முக்கிய காரணம்.

இளநரை உள்ளவர்களுக்கு வைட்டமின் B12, ஜிங்க் மற்றும் மெக்னீசியம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், தலைமுடிக்கு கருமை நிறம் தரும் மெலனின் உற்பத்திக்கு இந்தச் சத்துக்கள் அவசியம்.

இதற்கு பால், முட்டை, கீரைகள், பருப்பு வகைகள் மற்றும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இளநரையை தாமதப்படுத்த முடியும்.மேலும் மன அழுத்தத்தை குறைக்க யோகா, தியானம் மற்றும் போதிய ஓய்வு அவசியம்.