காதலனால் வந்த வினை? ஹெரோயினுடன் கைதான பல்கலைக்கழக மாணவி.!!

204

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த யுவதி பல்கலைக்கழகம் ஒன்றில் டிப்ளோமாக் கற்கைநெறியைப் பயின்று வருகின்றார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தில் கற்கும் யுவதியின் காதலன் மீது சந்தேகப்பட்டுள்ள பொலிஸார், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.