ஆசியாவிலேயே முதல் வீராங்கனை! புதிய வரலாறு படைத்த இலங்கை கேப்டன்

216

இலங்கையின் மகளிர் அணித்தலைவர் சாமரி அதப்பத்து 100 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார்.

மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இலங்கை அணித்தலைவர் சாமரி அதப்பத்து (Chamari Athapaththu) 100 சிக்ஸர்கள் மைல்கல்லினை எட்டினார்.

இதன்மூலம் அவர் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் ஆசிய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.

அத்துடன் டி20 உலகக்கிண்ண சேஸிங் போட்டியில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார்.

அதேபோல் டி20 உலகக்கிண்ணப் போட்டியில், சதமடித்த முதல் இலங்கை வீராங்கனை மற்றும் ஒட்டுமொத்த அரங்கில் 8வது வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார்.