வவுனியா மாநகர சபை மேயர் பதவியிலிருந்து காண்டீபன் நீக்கம்!

160

வவுனியா மாநகர சபை மேயர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் மேயர் பதவியிலிருந்தும் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், 1947 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் 1989 ஆம் ஆண்டின் மாகாண சபைகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி கே. கந்தையா அரியநாயகம் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, காண்டீபன் அவர்கள் மேயர் பதவியைத் தொடரத் தகுதியற்றவர் என தீர்மானிக்கப்பட்டதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2026 ஜூன் 24 முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் மேயர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வவுனியா மாநகர சபை தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூலை மாத முற்பகுதியில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.