முச்சக்கர வண்டி மோதி பல்கலைக்கழக மாணவர் படுகாயம்; சாரதி கைது.!

101

கஹத்துடுவ – ரிலாவல சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கஹத்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – ஹொரணை வீதியில், கொழும்பிலிருந்து கஹத்துடுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, ஹொரணை திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்துதலே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவர் வேதர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹத்துடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.