வவுனியாவில் ரயில் விபத்தில் பெண் பலி: முச்சக்கரவண்டி சாரதி கவலைக்கிடம்.!!

120

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் வயோதிப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து திருநாள்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, ரயில் கடவையை கடக்க முயன்ற போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த வயோதிப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.