விண்வெளிக்குப் புறப்படும் இந்திய வம்சாவளி விஞ்ஞானி – நாசாவின் முக்கிய அறிவிப்பு.!!

91

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, வரும் 14ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விண்வெளிப் பயணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் மேனன் இடம் பெற்றுள்ளார்.

பசர்வதேச விண்வெளி மையத்தில் இந்த விண்வெளி வீரர்கள் 8 மாதங்கள் தங்கியிருந்து தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த விண்வெளிப் பயணமானது எதிர்வரும் ஜூலை 14ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.