வவுனியா – குறிசுட்டகுளத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கி இளைஞன் மரணம்.!

117

வவுனியா, குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (02.06) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் அப்பகுதியிலுள்ள காளி கோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தை இளைஞர் ஒருவர் இயக்கிய போது அதற்குள் தவறி வீழ்ந்த இளைஞன் உயிரிந்துள்ளார்.

உயிரிழந்தவர் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த கஜேந்திரன் குகப்பிரியன் (வயது 20) என்பவராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.