யாழில் பதின்ம வயதான பாடசாலை மாணவி கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது.!

63

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியான சம்பவத்தில் சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இந்த சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் நடந்தது. பாடசாலை மாணவியான 15 வயது சிறுமி, வயிற்று வலி இருப்பதாக தாயாரிடம் கூறியதையடுத்து, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மாணவி ஏழரை மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தாயார் மாணவியை உடனடியாக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார். பொலிசார் மாணவியை கைது செய்து, வைத்திய பரிசோதனையின் பின் விசாரணை நடத்தினர்.

இதன்போது தனது தாயாரின் சகோதரியின் மகனான- ஒன்றுவிட்ட சகோதரன்- ஒருவரும், மற்றொரு நபரும் தன்னை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் வல் லுறவுக்குள்ளாக்கியதாக மாணவி தெரிவித்தார்