யாழில் தாயையும் மகளையும் கத்தியால் குத்திவிட்டு தொடருந்தின் முன் பாய்ந்த நபர்.!!

84

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின் அப்பெண்ணின் தாயாரை கத்தியால் குத்தி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

இந்த கொடும் துயரச் சம்பவம் இன்று மாலை பதிவாகியது.

நல்லூர், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினில் அத்துமீறி நுழைத்த இளைஞன் வீட்டில் இருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.

அதேவேளை குறித்த பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டதில் , தாயார் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் அங்கிருந்து தப்பி சென்று அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதம் முன் பாய்ந்து உயிரை மாய்ந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.