யாழில் கணவருடன் பிடிபட்ட ஆசிரியை; துவைத்தெடுத்த மனைவி.!!

96

யாழ் நகர்ப் பகுதியில் தனது கணவனை சந்திக்க வந்த ஆசிரியை , அரச ஊழியரான மனைவியின் தாக்குதலில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை கணவனை விவாகரத்து செய்து வாழ்பவர் என்பதுடன்  இரு பெண் பிள்ளைகளின் தாய் எனவும் தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த ஆசிரியை வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை எனவும் தாக்குதல் நடத்திய பெண்ணும் அரச ஊழியர் எனவும் அவரது கணவன் வலிகாமம் பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியர் எனவும் கூறப்படுகின்றது.

விஜயதசமியன்று ஆசிரியை பகல் வேளை  தனது நண்பனான ஆசிரியர் வீட்டிற்கு வந்த நிலையில் , திடீரென அங்கு மனைவி வந்துள்ளார்.

நீண்ட நேரமாக வீ்ட்டுக்கு வெளியே நின்று மனைவி கணவனை அழைத்த போதும் கணவன் வருவதற்கு தாமதித்த நிலையில் மனைவி உறவினர் சிலருடன் மதில் பாய்ந்து வீட்டின் உள்ளே சென்றுள்ளார்கள்.

இதன்போது பெண்களின் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தேடுதல் நடாத்தியபோது வீட்டின் வெளி மலசல கூடத்தில் மறைந்திருந்த ஆசிரியை பிடிபட்டுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மனைவி மற்றும் உறவினர்களால் ஆசிரியை நையப்புடைக்கப்பட்டதுடன்  அவரது  மோட்டார் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கணவன் மீதும் மனைவி தாக்குதல் நடாத்திய நிலையில் ஆசிரியையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கணவன் ஓட்டம்  பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.