முல்லைத்தீவு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு..!

144

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று(23.06.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் இத்திமடு பகுதியில் வயல் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர், குமுழமுனை 7ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 30 வயதுடைய சண்முகராசா சர்விதன் என்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன், உயிரிழந்தவரின் மரண விசாரணையை அதிகாரி கா.ரதிநாதன் மேற்கொண்டுள்ளதுடன், சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் உடல் கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.