மறைந்த இசையமைப்பாளர், பாடகர் தேவாவிற்கு அரச மரியாதை.

76

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் தேவா, இன்று (17) காலை 75 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

இந்த நிலையில், இசையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், தேவாவின் இறுதிச் சடங்கிற்கு அரச மரியாதை வழங்கப்படும் எனத் முதலமைச்சர் விஜய் தலமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, தேவாவின் இறுதிச் சடங்குகள் நாளை மாலை நடைபெறவுள்ளதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மறைவுச் செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பலர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இசையமைப்பாளர் தேவா பூதவுடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். மேலும் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

மறைந்த இசையமைப்பாளர், பாடகர் தேவாவிற்கு அரச மரியாதை! | State Honors Funeral Late Thenisai Thendral Deva

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் காலமானார். வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.