மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பரிதாபப் பலி.!!

66

அனுராதபுரம்- இராஜாங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(24.10.2026) அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள், அவரது கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் இருந்த மரத்துடன் பலமாக மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து காரணமாகப் பலத்த காயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர் பரிதாபப் பலி! | Man Dies Motorcycle Accident

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.