மகளை தொடர்ச்சியாகக் கடித்து கொடூரமாகத் துன்புறுத்திய தாய் கைது!

47

14 வயதுடைய தனது மகளை தொடர்ச்சியாகத் தாக்கி, கடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி ஹொரண மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுமியின் உடலில் காணப்பட்ட காயங்கள் மற்றும் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளில், தாய் நீண்டகாலமாக சிறுமியைத் தாக்கி வந்ததுடன், உடலில் கடித்த காயங்களையும் ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது சிறுமி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மருத்துவ அறிக்கையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் துன்புறுத்தல்களால் சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.