பொரளையில் வீடொன்றுக்கு முன்பாக வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டு.!!

27

கொழும்பு, பொரளை பகுதியில் வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (23.08.2026) காலை வேளையில் பதிவாகியுள்ளது.

பொரளை – லெஸ்லி ரணகல மாவத்தையிலுள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக வீசிச் செல்லப்பட்டிருந்த வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டே இதன்போது பொரளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த கைக்குண்டு தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.