பெரஹெராவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை விபத்தில் படுகாயம்.!!

18

பெரஹெராவிற்காக லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட யானை ஒன்று மெல்சிரிபுர, ஓமாரகொல்ல பிரதேசத்தில் வீதியோரத்தில் நின்றபோது டிப்பர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்துள்ளது.

கேகாலை, ரந்தெனிய பிரதேசத்தில் இருந்து இந்த யானை மனம்பிட்டிய தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவிற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யானையைக் கொண்டு சென்ற லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, யானையை அந்த வாகனத்தில் இருந்து இறக்கி வீதியோரத்தில் நிறுத்த முற்பட்ட வேளையில், தம்புள்ளையில் இருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த மணல் ஏற்றிவந்த டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து நேரிட்டுள்ளது.

டிப்பர் வாகனத்தில் மோதிய யானை சுமார் 50 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.