புத்தளம் வானில் தீப்பிழம்புகளுடன் பறந்த மர்மப் பொருள்! ஏலியன் விண்கலமா?

49

நேற்று (01) திங்கட்கிழமை அதிகாலை வேளையில் புத்தளம் நகர மக்கள் அனைவரும் படுக்கையை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவரும்படியான ஒரு மிரட்டலான சம்பவம் நடந்துள்ளது! 😱 வானில் தீப்பிழம்புகளுடன், அதிவேகமாகப் பறந்து சென்ற விசித்திரமான மர்மப் பொருள் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியையுமே உறைந்துபோகச் செய்துள்ளது.

அதிகாலை தூக்கத்தைக் கலைத்த அந்த விசித்திரக் காட்சியைக் கண்டு, மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். சிலர் சுதாரித்துக்கொண்டு தங்களது கைபேசிகளில் (Smartphones) அந்தப் பொருளைப் புகைப்படமும் எடுத்துள்ளனர்.

“வானில் பறந்த அந்த மர்மப் பொருள் பல அடி நீளமுடையதாக இருந்தது. ஒரு ராக்கெட் அல்லது ஏவுகணையின் பின்புறத்தைப் போல பயங்கரமான நெருப்பு வாலுடன் அது காட்சியளித்தது! ”

சாதாரண விமானங்களை விடவும் அசுர வேகத்தில், தரையிலிருந்து வெறும் 300 அடி உயரத்தில் பறந்த அந்தப் பொருள், இறுதியாகப் புத்தளம் களப்பு (Lagoon) வானப் பகுதிக்கு மேல் நகர்ந்து, திடீரென மாயமாய் மறைந்துபோயுள்ளது!

 

பயத்தில் ஒளிந்துகொண்ட மக்கள்! ஏலியன் அட்டாக்கா? 

இந்தத் திடீர் நிகழ்வினால் ஏதேனும் ஆபத்துகள் ஏற்பட்டுவிடுமோ என அச்சமடைந்த சிலர், தங்களது வீடுகளை விட்டு ஓடிப் பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துகொண்டனர். “இது வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலமா (UFO)?” அல்லது “ஏதேனும் ரகசிய ஆயுத சோதனையா?” எனப் பொதுமக்கள் மத்தியில் விவாதங்கள் அனல் பறக்கின்றன. 🔥

 

கொழும்புப் பல்கலைக்கழக பேராசிரியர் கொடுத்த ‘ட்விஸ்ட்’! 

இந்த மர்ம நிகழ்வு குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில், நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் மையத்தின் தலைவரும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியருமான சந்தன ஜயரத்ன இதற்கான அறிவியல் விளக்கத்தை உடைத்துள்ளார்!

 

பேராசிரியர் சந்தன ஜயரத்ன கூறுகையில்…

“வானில் பறந்த அந்தப் பொருள் ஒரு விண்கல்லாக (Meteor) இருப்பதற்கே அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. பொதுவாக எரியும் நெருப்பு வாலுடன் ஒரு பொருள் தென்படுமாயின் அது விண்கல்லாகவே இருக்க முடியும். விண்கற்கள் என்பன ஆண்டின் எந்தவொரு காலப்பகுதியிலும் இரவு அல்லது அதிகாலை வேளையில் வானில் தென்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வாகும்.”

இருப்பினும், “இது குறித்து ஒரு உறுதியான முடிவுக்கு வருவதற்கு முன்னர் இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.