பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை: அதிரவைக்கும் காட்சி.!!

80

பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிருடன் இருப்பது தெரியவந்ததால் அதன் பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் விழுந்த குழந்த ஒன்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கூறியதால் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

அரிசோனாவைச் சேர்ந்த அலெக்சஸின் (Alexus Fiordilino) மகன் வின்சென்ட். 18 மாதக் குழந்தையான வின்சென்ட் நீச்சல் குளத்தில் விழுந்துகிடப்பதைக் கண்ட பெற்றோர் அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

பிணவறையில் வைக்கப்பட்ட குழந்தை: அதிகாரிகள் கண்ட அதிரவைக்கும் காட்சி | Child Discovered Alive In Hospital Morgue In Us

குழந்தையை பரிசோதித்த Dr ஆர்யன் (Dr Aryan Toosi) என்னும் மருத்துவர், குழந்தை இறந்துவிட்டதாகக் கூற, குழந்தை பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஐந்து மணி நேரத்துக்குப் பின், நீதிமன்ற விசாரணை அதிகாரிகள் அறிக்கை தயாரிப்பதற்காக குழந்தை வைக்கப்பட்ட பிணவறைக்குச் செல்ல, குழந்தை சுவாசித்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக குழந்தை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட, குழந்தை உயிர் பிழைத்துக்கொண்டான்.

குழந்தையின் பெற்றோர், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், குழந்தையை மருத்துவமனையில் கண்ட பொலிசார் இருவர், குழந்தை உயிருடன் இருப்பதாக மருத்துவரிடம் கூற, நான் மருத்துவக் கல்லூரியில் சும்மா படிக்கவில்லை, நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள், என்னை என் வேலையை செய்யவிடுங்கள் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.