பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இணையவழியூடாக முன்னெடுக்க தீர்மானம்; டெங்கு தீவிரம்?

87

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை (13) முதல் ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் டெங்கு நோய் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டும், மாணவர்கள் விடுத்த கோரிக்கைகளை கவனத்திற்கொண்டும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பல்கலைக்கழகத்தை மூடுவது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று துணைவேந்தர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை அனைத்து பல்கலைக்கழக ஊழியர்களும் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விடுதிகள் அனைத்தும் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

முன்னதாக, கலைப் பீடம், சட்ட பீடம், கல்வி பீடம் மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகளை ஜூலை 9 முதல் ஒரு வார காலத்திற்கு இணையவழியூடாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.