நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் – சபாநாயகரை கடுமையாகச் சாடிய ரோஹினி கவிரத்ன!

67

நாடாளுமன்ற விவாதங்களின் போது சபாநாயகரின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

“இந்த நாடாளுமன்றத்தில் சபாநாயகர்தான் ஒரு வேடிக்கையாக (Joke) மாறியுள்ளார்” என அவர் சபையில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற ஒழுங்குமுறைகள் மற்றும் விவாதங்களின் போது சபாநாயகர் நடுநிலையாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் மற்றும் விவாத நேர ஒதுக்கீடுகள் தொடர்பாக இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட நீண்ட வாக்குவாதத்தின் போதே இந்தத் காரசாரமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தின் மாண்பைப் பாதுகாக்கும் வகையில் உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என இதன்போது சபாநாயகர் தரப்பில் வலியுறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.