நகைக்கடையில் சூட்சுமமாக தங்கநகை திருடிய பெண் கைது.!!

110

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் தங்கக் காப்பு ஒன்றை களவாடிய பெண்ணை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் வெள்ளிக்கிழமை(10.07.2026) கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நகைக் கடை ஒன்றில் கடந்த 2026.06.04 அன்று தங்க நகை கொள்வனவு செய்வதற்கு குறித்த பெண் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்க காப்பு ஒன்றை மிகவும் சூட்சுமமான முறையில் அப்பெண் களவாடிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த நகைக் கடை உரிமையாளர் களுவாஞ்சிகுடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையின் முன்னால் வைத்து குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.