திறக்கப்பட்டது இரணைமடு வான் கதவு : அறுவடைக்கு தயாரான நெல்வயல்கள் நாசம்!!

236

வட மாகாணத்தில் தற்பொழுது கனத்த மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்பொழுது பெரும் போக அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் கதிர்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

குறித்த மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்தின் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக நீர்மட்டம் தற்பொழுது36.6அங்குலமாக அதிகரித்துள்ளது

இதன் காரணமாக இரணைமடு குளத்தின் 08 கதவுகளும் 1/2 அடி மேலதிக நீர் திறந்து விடப்பட்டுள்ளது இவ்வாறு மேலதிக நீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்து நெல்வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.