சிறுநீரை ஆய்வு செய்யும் ‘Smart Toilet’ ; சுகாதாரத்தில் புதிய புரட்சி.!

221

உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் துல்லியமாகக் கண்டறியும் வகையில், Vivoo நிறுவனம் தனது புதிய ‘Smart Toilet’ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் பொருத்தப்பட்டுள்ள ஒப்டிகல் சென்சார்கள் மூலம் சிறுநீரைத் தானாகவே ஆய்வு செய்யும் வசதி காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவைத் துல்லியமாகக் கண்டறிய இது உதவுகின்றது.

மேலும் இந்த ஆய்வின் முடிவுகளை தொலைபேசி செயலி (Mobile App) மூலம் ஒரு ‘சுகாதார அறிக்கையாக’ பயனர்களுக்கு உடனடியாக வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.