கொழும்பில் 16 வயது மாணவன் அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடி பலி.!!

119

கொழும்பு – பிலியந்தலை பகுதியில், பாடசாலை மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்துடன் மோதியதில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

மகரகம மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இசல தஹம் (வயது 16) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாயார் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியுள்ளது.

விபத்தின் வீரியத்தால், மோட்டார் சைக்கிளின் முன்பக்க சக்கரம் உடைந்து தனியாகக் கழன்று சென்றுள்ளது.

அவருடன் பயணித்த நண்பர் பலத்த காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவன், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பல பாகங்கள் பிரிக்கப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்ட (Modified) மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.