கொலையில் முடிந்த சிறுபிள்ளைகள் இருவரின் காதல்.!!

98

சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பாலினம், வயது, நாடு என்று எந்த வரையறைக்கும் உட்படாமல் சிறுபிள்ளைகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இத்தாலியிலுள்ள Piacenza என்னுமிடத்தில், 13 வயது சிறுமி ஒருத்தியும் 15 வயது சிறுவன் ஒருவனும் காதலித்துவந்துள்ளார்கள்!

 

ஒரு கட்டத்தில் தன் காதலிக்கு அந்தச் சிறுவன் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க, அந்தச் சிறுமி அவனைப் பிரிந்துள்ளாள்.

அதற்குப் பிறகும் அந்தச் சிறுவன் அந்தச் சிறுமியை பின்தொடர்ந்து அவனுக்கு தொல்லை கொடுத்துவந்துள்ளான்.

இந்நிலையில், அரோரா (Aurora Tila) என்னும் அந்தச் சிறுமி, 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஒரு கட்டிடத்தின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்து இறந்துவிட்டாள்.

அவள் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக அந்தச் சிறுவன் கூறியிருந்தான். ஆனால், அவன் கூறிய விடயங்கள், அந்தச் சிறுமி இறந்துகிடந்த நிலையுடன் ஒத்துப்போகவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுமி ஏழாவது மாடியில் பால்கனியிலிருந்த கம்பியைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருந்ததையும், அந்தச் சிறுவன் அவள் கையில் அடிக்க, அதனால் அவள் கீழே விழுந்ததையும் தான் பார்த்ததாக, நடந்ததைக் கண்ணால் கண்ட ஒருவர் சாட்சியமளிக்க, அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டான்.

 

அவனுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் அரோராவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதுடன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளான் அந்தச் சிறுவன்.

இவ்வளவு காலத்துக்குப் பிறகு அந்தச் சிறுவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், அதனால் அவனது தண்டனைக் காலம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் குறையக்கூடும் என்று கூறியுள்ள அரோராவின் தாயின் சட்டத்தரணி, அது நியாயமல்ல என்று கூறியுள்ளார்.

அந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி துவங்க உள்ளது.