கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி வரலாற்றில் புதிய மைல்கல்! அகில இலங்கை குத்துச்சண்டையில் 3 வெண்கலப் பதக்கங்கள்.

172

அகில இலங்கை பாடசளுக்கு இடையிலான 2026 ம் ஆண்டுக்கான எல்.வி. ஜயவீர ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இருந்து இம்முறை 10 ஆண் மாணவர்களும் 04 பெண்மாணவிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கேம்பிரிட்ஜ் கல்லூரியின் வரலாற்றில் முதன் முறையாக 03 மாணவிகள் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களின் இந்த வெற்றி பாடசாலை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைகிறது. இந்த வெற்றிக்கு கடுமையாக உழைத்த மாணவிகளுக்கும் அவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சி வழங்கிய குத்துச்சண்டை பயிற்சியாளர், ஆசிரியர் திரு.செபஸ்டியன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். இந்த போட்டியானது நாவலப்பிட்டி ஜயதிலக்க விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் மே 18 முதல் 23 வரை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி வரலாற்றில் புதிய மைல்கல்! அகில இலங்கை குத்துச்சண்டையில் 3 வெண்கலப் பதக்கங்கள்…….

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2026 ம் ஆண்டுக்கான எல்.வி. ஜயவீர ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டியில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இருந்து இம்முறை 10 ஆண் மாணவர்களும் 04 பெண்மாணவிகளும் கலந்துகொண்டிருந்தனர்.