கிளிநொச்சி நகரில் தடுத்து நிறுத்தப்பட்ட டிப்பர் வாகனங்கள்: விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்!  

101

கிளிநொச்சி ஏ-09 வீதி இரணைமடுச் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையான பகுதியில் டிப்பர் வாகனம் உட்படக் கனரக வாகனப் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிப்பது எனக் கடந்த மாதம்-30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைவாக இன்று வெள்ளிக்கிழமை (03.07.2026) கிளிநொச்சி நகர்ப் பகுதியில் டிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுப் பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் வீதி விபத்துக்களைத் தடுத்தல் மற்றும் எதிர்காலச் சந்ததியினரை நல்வழிப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போது பாடசாலைகள் ஆரம்பித்தல், நிறைவுறும் நேரத்தைக் கருத்தில் எடுத்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமையக் காலை-07 மணி முதல் காலை-08 மணி வரைக்கும், பின்னர் பகல்-01 மணி தொடக்கம் பகல்-02 மணி வரைக்கும் இடைப்பட்ட நேரங்களில் இரணைமடுச் சந்தி மற்றும் பரந்தன் சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் ஏ9 வீதியில் டிப்பர் வாகனம் உட்படக் கனரக வாகனங்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.