கடலில் நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

131

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில்  நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (06) மதியம் தலைமன்னார் கடலில் தனது நண்பர்களுடன் குறித்த நபர் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவராவார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.