ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்..!

42

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுவர்கள் தொடர்பான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக 17 வயதுடைய இரு சிறுவர்கள் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 56 வயதுடைய வர்த்தகர் ஒருவரின் தொடர்பும் வெளிச்சத்துக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

விசாரணைகளின் போது, குறித்த சிறுவர்களை பணம் வழங்குவதாகக் கூறி சம்பவத்தில் ஈடுபடுத்தியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த வர்த்தகர் பின்னர் நீதிமன்றில் சரணடைந்தார். அவரை கைது செய்த பொலிஸார் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த வர்த்தகரை யூன் 08 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.