ஈழத்தமிழர்களுக்கு ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை: சுகாஷ் கருத்து! 

106

ஈழத்தில் விஜயின் இரசிகர்கள் சீமானைத் தூற்ற வேண்டியதில்லை. சீமானின் ஆதரவாளர்கள் விஜயை எதிர்க்க வேண்டியதுமில்லை. ஈழத்தமிழர்களுக்கு இத் தருணத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவு தேவை என்பதை நினைவில் நிறுத்துவோமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், பிரபல சட்டத்தரணியுமான க.சுகாஷ் இன்று (20.05.2026) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

இதை வைத்து ஈழத்தமிழினத்தைக் கூறுபோடவும் இனப் படுகொலையைத் திசை திருப்பவும் இலங்கை அரசாங்கமும் அதன் முகவர்களான தமிழ் எட்டப்பர்களான அரசியற் கோமாளிகளும் போடும் திட்டத்திற்கு பலிக்கடா ஆவதைத் தவிர்ப்போம்! மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆட்சிப் பணி சிறக்கட்டும்! அண்ணன் சீமானின் தமிழ்த்தேசியப் பணி செழிக்கட்டும்!

இலங்கை அரசினதும், அதன் முகவர்களான குறளி வித்தைக் கோமாளிகளதும் கூத்துக்களை இனியாவது ஈழத்தமிழினம் உணர்ந்து தெளியட்டும்!இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை! எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.