இலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ விடுதலை.!!

65

 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (04) முற்பகல் ஆஜரான அவர்,  கைது செய்யப்பட்டிருந்தார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன், அகன்ற உடலைக் கொண்ட விமானங்களை இணைக்கும் நடவடிக்கையின்போது இலஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில், வாக்குமூலம் வழங்க குறித்த ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கமைய, அவர் முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்திருந்த நிலையில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.