ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்தில் 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

30

எம்பிலிப்பிட்டியாவில் உள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 22 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தின் காரணமாக ஏற்பட்ட தீக்காயங்கள் மற்றும் நச்சுப்புகையை சுவாசித்தமை காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எம்பிலிப்பிட்டியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் (03) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (3) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்தில் காயமடைந்த சுமார் 15 பேர் சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தீப்பரவலை கட்டுப்படுத்த செவனகல தீயணைப்புத்துறையிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளதுடன், தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.