அர்ச்சுனா எம்பியின் பதவி பறிபோகுமா?: அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது மனு!    

93

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைச் செல்லுபடியற்றதாக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்- 31 ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02.07.2026) உத்தரவிட்டுள்ளது.

அபினவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன் கோபல்லவ முன்னிலையில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.