அனோஜனுக்காக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்.!!

97

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு அரச கருணை கோரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சவூதி அரேபியாவிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

செப்டம்பர் 24 ஆம் திகதி சவூதி வெளியுறவு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், அனோஜனைத் தண்டனையிலிருந்து விடுவித்து அவரது உயிரைக் காப்பாற்ற அவசர மற்றும் இரக்கமுள்ள உதவியை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அனோஜனுக்கு முதலில் விதிக்கப்பட்டிருந்த ஐந்தாண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான சமீபத்திய அறிக்கைகள், அவருக்கு முதலில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை பின்னர் மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதையும் உறுதிப்படுத்தியுள்ளன.

அனோஜனுக்காக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்! விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Opposition Mps Appeal To Saudi Arabia For Anojan

இந்த வழக்கு தொடர்பான முகநூல் கருத்தை அனோஜன் உடனடியாகத் திரும்பப் பெற்று நீக்கிவிட்டதாகவும், மன்னிப்பும் கோரியதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் இஸ்லாத்தை அவமதிக்கும் அல்லது புண்படுத்தும் நோக்கம் கொண்டிருக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

குற்றத்தின் தன்மை, எடுக்கப்பட்ட சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் அனோஜனின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட, இவ்வழக்கு குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைப் நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்குமாறு அவர்கள் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சகிப்புத்தன்மை மற்றும் பரிவுணர்வு ஆகிய விழுமியங்களைச் சுட்டிக்காட்டி, மனிதாபிமான அடிப்படையில் இந்த வழக்கைப் பரிசீலித்து, அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவூதி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அனோஜனுக்கு கருணை காட்டக் கோரி அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் இருவரும் ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.