WhatsApp கொண்டு வரும் புதிய வசதி – இனி தொலைபேசி இலக்கம் தேவையில்லை.

189

WhatsAppஇல் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘பயனர் பெயர்’ (Username) அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன் மூலம், உங்கள் தொலைபேசி இலக்கத்தைப் பகிராமலேயே மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும்.

நீங்கள் விரும்பினால், உங்களைத் தொடர்புகொள்பவர்களுக்கு உங்கள் தொலைபேசி இலக்கம் தெரியாமல் மறைத்துக்கொள்ளலாம்.

தகுதியுள்ள பயனர்கள், செயலியின் Settings > Account > Username பகுதிக்குச் சென்று தங்கள் விருப்பமான பெயர்களை முன்பதிவு செய்யலாம்.

இந்த அம்சம் தற்போது படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

உங்கள் பகுதியில் இந்த வசதி கிடைக்கும்போது, WhatsApp செயலியில் உங்களுக்கு அறிவிப்பு வரும்.