வித்தியா கொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.!

152

புங்டுதீவுப் பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவைக் கடந்த- 2015 ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திக் கொலை செய்தமை தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை (06.05.2026) உறுதி செய்துள்ளது.

தங்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடுகளை விசாரித்த பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.